டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸி-யை வீழ்த்தியது இந்திய பெண்கள் அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 219 ரன்கள் குவித்த நிலையில், இந்தியா 406 ரன்கள் குவித்தது.
187 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 75 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.