யாழ்ப்பாணத்திலுள்ள ஆரியகுளம் புனரமைப்புக்கு நிதி வழங்கினேன், சரியாக பேணப்படாமல் இருக்கிறது. எனது நிதியில் செயற்படுத்தப்படும் திட்டங்களை உரியவர்கள் முறையாகப் பேணினால் இன்னும் இன்னும் உதவத் தயாராக இருக்கிறேன்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு மாதந்தோறும் அவர்களுடைய சுய தொழில் முயற்சிகளுக்கு உதவத் தயாராக இருக்கிறேன் என்றும் தனது உரையில் தெரிவித்த தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் வாமதேவா தியாகேந்திரன், நிகழ்வுக்கு வந்திருந்த சிறையிலிருக்கும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்களையும் உலருணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபத்தின் திறப்புவிழா இன்று 23 December 2023 நடைபெற்றது.
இதன் போது உரையாற்றிய சிறைச்சாலைகள் புனர்வாழ்வு ஆணையாளர் தியாகி அவர்களை இன்று நேரில் சந்தித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் ,அவரது கண்களில் தெரியும் பிரகாசமும் உதவும் போது அவரது முகத்திலே தெரியும் மகிழ்ச்சியும் தன்னை வியக்க வைத்ததாகவும் தெரிவித்ததோடு, எவ்வித பேதமும் எதிர்பார்ப்பும் இன்றிய அவரது சேவைகள் நாடுபூராகவும் வியாபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.