செலான் வங்கி தனது Seylan Accelerate டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கு பலதரப்பட்ட விசேட நலன்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தது. வாடிக்கையாளர்களின் நிதிசார் நலனுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சலுகைகளை 2023 டிசம்பர் 31 வரை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆர்வமுள்ள தொழில் வல்லுநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், CESP மற்றும் Suite Partway கற்கைநெறிகளில் இணையும் முதல் 20 மாணவர்களுக்கு 100% பிரத்தியேக வகுப்புகளுக்கான கட்டணக் கழிவை பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனம் (CIMA) வழங்குகின்றது. இதனால் Accelerate டெபிட் கார்ட் உரிமையாளர்கள் தங்கள் சிறப்பு முகாமைத்துவ கணக்கீட்டுத் தகைமைகளை எவ்வித நிதி நெருக்கடியுமின்றி பெற்றுக்கொள்ள முடியும். மேலும், Business Management School (BMS) தனது வணிக முகாமைத்துவ HND, முகாமைத்துவ பட்டதாரி டிப்ளோமாக்கள் மற்றும் முகாமைத்துவ நிறைவேற்று சான்றிதழ்கள் என்பவற்றுக்கு 10% முதல் 15% வரை கட்டணக்கழிவுகளை வழங்கி வருகிறது.
அதேநேரம், West of England பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் முதுமானி மற்றும் இளமானி கற்கைநெறிகளை வழங்கும் Bristol நிறுவகம், கணக்கீடு மற்றும் நிதியியில் MBA/MSc, LLM in Commercial Law, IBM (Top-up), மற்றும் ஆரம்பக் கற்கைநெறிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.190,000 வரை கட்டணக் கழிவுகளைப் பெற்றுத்தருகின்றது. இவற்றுடன் Seylan Accelerate, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்துடன் (SLIM) இணைந்து அனைத்து SLIM கற்கைநெறிகளுக்கான புதிய பதிவுகளுக்கும் 10% கட்டணக் கழிவை வழங்கி, அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில் புதிய தலைமுறை சந்தைப்படுத்துனர்களுக்கு ஆதரவு வழங்குகின்றது.
Seylan Accelerate, தரமான எழுதுபொருட்களை நாடுபவர்களுக்கு சிறந்த ஒரு சலுகையைப் பெற்றுத்தந்திட Promote உடன் கூட்டிணைந்துள்ளது. இப்பொழுது வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய அலுவலகப் பொருட்கள் முதல் கவர்ச்சியான காகிதாதிகள் வரை அனைத்து Promote தயாரிப்புகளுக்கும் 20% வரை விலைக்கழிவை அனுபவிக்கலாம். மேலும், இந்த கூட்டிணைவானது நாடு முழுவதும் இலவச விநியோகத்தை வழங்கி சௌகரியத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது எனலாம்.
தமது Apple சாதனங்களை தரமுயர்த்த விரும்பும் Tech ஆர்வலர்களுக்காக iPhones, iPads, மற்றும் MacBooks இற்கு ரூ.10,000 விலைக்கழிவை GenXT வழங்குகின்றது. Accelerate வாடிக்கையாளர்கள் Apple சாதனங்களின் பிரபல்யத்துக்கு காரணமான அதிநவீன தொழினுட்பம் மற்றும் புதுமையான அம்சங்களை கணிசமான சேமிப்பு சகிதம் அனுபவிக்கலாம்.
இதற்கு மேலதிகமாக, நகைப் பிரியர்களுக்கு மேலுமொரு நல்ல செய்தியும் உண்டு. மல்லிகா ஹேமச்சந்திரா ஜூவல்லர்ஸ் 20% முதல் 45% வரையான விலைக்கழிவை வைரம் பதிக்கப்பட்டவை, வண்ணக் கற்கள், மற்றும் 22 கரட் தங்க நகைகள் உட்பட பல அசத்தலான நகைகளுக்கு வழங்குகிறது.
Bigdeals.lk, ஒவ்வொரு வியாழக்கிழமையும் 5000 இற்கும் அதிகமான உற்பத்திகளுக்கு 15% வரையான சலுகையை வழங்கி, பலதரப்பட்ட உற்பத்தி வகைகளை உள்ளடக்கிய மாபெரும் ஒன்லைன் ஷொப்பிங் திருவிழாவை எமக்களிக்கிறது. இந்தச்சலுகைகளுக்கும் மேலதிகமாக, Accelerate டெபிட் கார்ட் பாவனையாளர்கள் செலான் வங்கி மற்றும் ஏனைய வங்கிகளின் ATM களில் குறைந்தபட்சம் இரண்டு தடவை எந்தவித கட்டணமும் இல்லாமல் பணத்தை எடுக்க முடியும். Accelerate Plus, Prime மற்றும் Premier கார்ட் உரிமையாளர்கள் செலான் வங்கி ATM களில் முற்றிலும் இலவசமாக பணத்தை எடுக்கலாம்.
Seylan Accelerate, தனது Premier, Prime, Plus, மற்றும் ஆரம்பக்கட்ட அங்கத ;துவப் பிரிவுகளுடன் வழமையான வங்கிச்சேவைக்கு அப்பாற்பட்ட ஒரு சேவையை வழங்குகிறது. இத் திட்டம் பிறந்தநாள், திருமணங்கள், ஆண்டுநிறைவு விழாக்கள் மற்றும ; குழந்தைகளின் பிறப்பு போன ;ற வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் ரூ.200,000 வரை பண வெகுமதிகளையும் வழங்குகிறது.
செலான் வங்கியானது செயற்திறன் மிக்கவர்கள் மற்றும் புத்தாக்குனர்களை தனது Seylan Accelerate குடும்பத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைக்கிறது. தனிச்சிறப்பான நன்மைகள் மற்றும் பிரத்தியேக சேவைகள் ஊடாக நிதிச் சுதந் திரத்தையும் மன அமைதியையும் அனுபவியுங்கள். மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள செலான் வங்கிக் கிளைக்கு வாருங்கள் அல்லது www.seylan.lk ஐ பார்வையிடுங்கள். உடனடி ஒத்துழைப்புக்கு, வாடிக்கையாளர்கள் செலான் 24X7 துரித அழைப்பு இலக்கமான 011 200 88 88 ஐ அழையுங்கள்.
அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, தனது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு அதியுச்ச வங்கிச்சேவை அனுபவத்தை நவீன தொழினுட்பம், புத்தாக்க உற்பத்திகள், குறித்த பிரிவில் அதிசிறந்த சேவை ஆகிய அம்சங்களின் ஊடாக பெற்றுத்தரும் நோக்கத்தோடு இயங்கி வருகின்றது. வங்கியோடு இணைந்துள்ள சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், சில்லறை மற்றும் கூட்டு நிறுவன வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதோடு, நாடெங்கும் 540 க்கு மேற்பட்ட அணுகல் வழிமுறைகளையும் செலான் வங்கி கொண்டுள்ளது. வங்கியின் தேசிய நீண்டகால தரப்படுத்தல் ‘A-’(lka) ஆக மாற்றம் பெற்றிருப்பதோடு, அனைத்து அம்சங்களிலும் விசேடத்துவ செயற்திறன் வெளிப்படுத்துகையுடன் நிதிரீதியாக ஸ்திரமான ஓர் அமைப்பாக Fitch Ratings இனால் செலான் வங்கி முன்மொழியப்பட்டுள்ளது. செலான் வங்கியின் நிதிரீதியான ஸ்திரத்தன்மைக்கும், அனைத்து அம்சங்களிலும் தொடர்ச்சியான விசேடத்துவ சேவையை உறுதி செய்வதற்கு வங்கியின் சளைக்காத அர்ப்பணிப்புக்கும் இவை சான்றாகும்.