கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை கருத்திற் கொண்டு அவர்களின் வசதிக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகை விடுதிகளில் மட்டும் மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது.