தமிழக முகாம்களிலுள்ள எம்மவர் குடும்பங்களுக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிலநூறு தமிழக குடும்பங்களுக்கும் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு, நேற்றைய தினம் யாழ்ப்பாணம் திரும்பிய தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா அவர்களை மரியாதை நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி சிநேகபூர்வமான சந்திப்பாக அமைந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பாராட்டி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினரூடாக தமிழர் தாயகப் பகுதியின் வெள்ளப் பாதிப்புகள் தொடர்பில் நிலைமைகளை தியாகி கேட்டறிந்து கொண்டார்.