இன்று (20.12.2023) தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, பகுதிகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினார் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்.
திருநெல்வேலி டவுன் பகுதி மக்களுக்கு ஐந்தாயிரம் பேருக்கு பிரியாணி – தண்ணீர் பாட்டில், பிரட், பிஸ்கட், பெட்சிட், போன்ற தேவையான பொருட்களை திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்,மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து வழங்கினார்.