இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்திலுள்ள முகாம்களில் வசிக்கும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சில தமிழக குடும்பங்களுக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அங்கு விஜயம் செய்த தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் திரு. வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு, இந்திய ரூபா ஆயிரம் பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கினார்.