நடிகை பானுப்ரியா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
நடிகை பானுப்ரியா மூன்று மாநில நந்தி விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் இரண்டு எக்ஸ்பிரஸ் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
1967-இல் ஆந்திராவில் பிறந்த நடிகை பானுப்பிரியா பிறகு சென்னையில் குடும்பத்தோடு குடி பெயர்ந்திருக்கிறார். 1980களிலும், 90களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு அபிநயா என்கிற ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில் கடைசியாக கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும், அசோக் செல்வம் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்களையும் நடித்திருக்கிறார். அதற்குப் பிறகு இவர் எந்த திரைப்படங்களிலும் அதிகமாக நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக அதில் கூறி இருக்கிறார். இது பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. என்னுடைய கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பிறகு எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. மனமும் வெறுமையாகி விட்டது. ஷூட்டிங்கில் டயலாக் மறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன. கடந்த ரெண்டு வருஷம் இப்படித்தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இவரை குறித்து இதற்கு முன்புக்கு பரவிய வதந்திகளுக்கும் அவர் பதிலளித்திருக்கிறார். அதில் நான் என் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை. தற்போது என்னுடைய கணவர் உயிருடன் இல்லாததால் அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவியது. அப்போது நடிகை ராதா பதறி அடித்தபடி என்னிடம் வந்து உடல் நலம் விசாரித்தார் என்று கூறி இருக்கிறார்.
ஒவ்வொரு வருஷமும் நடத்தப்படும் 80ஸ் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்கிற கேள்விக்கு தனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என்று பதில் கூறியிருக்கிறார். தற்போது இவர் முழு நேரமும் வீட்டிலேயே இருப்பதாகவும், புத்தகம் படிப்பது பாடல்களை கேட்பது போன்ற வீட்டு வேலைகளை செய்து என தன்னை பிசியாக வைத்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். அது அதுமட்டுமல்லாமல் இவருடைய ஒரே மகளான அபிநயா தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக இருந்த நடிகை பானுப்பிரியா வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தன்னுடைய நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
நடிகை பானுப்பிரியா நடித்த பல திரைப்படங்கள் பாடல்கள் இப்ப வரைக்கும் ரசிகர்களால் மறக்க முடியாததாக இருந்து வரும் நிலையில், இவர் சன் டிவியில் சக்தி சீரியலிலும், அதைத் தொடர்ந்து வாழ்க்கை, கோபி ஏவிஎம், பொறந்த வீடா புகுந்த வீடா, ஆஹா என பல ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரை வெள்ளித்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை ரசிகர்களும் இப்போது ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கருத்து கூறி வருகிறார்கள். இவர் மீண்டும் எப்போது நடிக்கத் வருவார் என்று தங்களுடைய எதிர்பார்ப்பை கேள்விகளாக எழுப்புகின்றனர்.