ஐபிஎல் வரலாற்றை உடைத்த பாட் கம்மின்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பாட் கம்மின்ஸ்-ஐ 20.50 கோடி கொடுத்து வாங்கியது.
முன்னதாக இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் 18.50 கோடிக்கு விலை போய் இருந்தார்.
20.50 கோடிக்கு விலை பெற்று இமாலய சாதனை படைத்து இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.
2023 உலகக்கோப்பை தொடரை வென்ற கேப்டன் என்ற பெருமையை கொண்டவர். மேலும், வேகப் பந்துவீச்சு – பேட்ஸ்மேன் ஆவார். அத்தனை எளிதில் போட்டியை விட்டுக் கொடுக்காதவர்.
பாட் கம்மின்ஸ் இந்த ஏலத்தில் இத்தனை விலை பெறக் காரணம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி போட்டி போட்டது தான். இரண்டு அணிகளும் நல்ல வேகப் பந்துவீச்சு ஆல் – ரவுண்டர் வேண்டும் என்ற முடிவில் இருந்ததால் கடும் போட்டி நிலவியது.
ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 20 கோடி விலை கேட்டது. அப்போது அனைவரும் கை தட்டினர். இதுவரை ஐபிஎல் ஏலத்தில் இத்தனை விலை போனதில்லை என்பதால் பெரும் பரபரப்பு எழுந்தது. அப்போது சன்ரைசர்ஸ் அணியின் காவ்யா மாறன் விடாப்பிடியாக இருந்து 20.50 கோடிக்கு விலை கேட்டார். வேறு யாரும் அதற்கு மேல் கேட்க முன் வராத நிலையில் சன்ரைசர்ஸ் அணி பாட் கம்மின்ஸ்-ஐ வாங்கியது.