இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த விமானம் காலநிலை சீர்கேடு காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் திரும்பிச் சென்றது. தற்போது வட மாகாணத்தில் மழை வெள்ளத்துடன் கூடிய மோசமான காலநிலை நிலவும் சூழ்நிலையில், சென்னையில் இருந்து வந்த பயணிகள் விமானம், பலாலி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு பலமுறை முயற்சி செய்த போதிலும், அது கை கூடாமல் மீண்டும் சென்னை நோக்கி திரும்பி சென்றது.
எதிர்வரும் 21ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த காந்த குரலோன் ஹரிஹரனின் Live in Concert நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த ஹரிஹரன், குறித்த விமானத்திலேயே பயணிக்க இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்ச்சி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 9ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.