எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.
மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.