சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் சீனாவின் லான்ஜோவிலிருந்து மேற்கு-தென்மேற்காக 102 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.