இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தையில் முட்டை விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனுமதியுடன் இந்தியாவில் இருந்து ஒன்றரை கோடி முட்டைகளுடனான கப்பலொன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.