கனமழை காரணமாக வடக்கு மாகாணத்தில் இன்று 26 பாடசாலைகள் இயங்கவில்லை என வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளும் இன்று கற்றல் செயற்பாடுகளுக்காக இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் தொடரும் கனமழையால் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாகவும், மேலும் சில பாடசாலைகள் நீரினால் சூழப்பட்டமையாலும் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது.