வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த ஹரிஹரன் LIVE IN CONCERT நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டிலும் புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணங்கள் தடைபட்டு இருப்பதாலும், முல்லைதீவு கிளிநொச்சி போன்ற பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதனாலும் அங்கிருந்து மக்கள் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இவற்றை கருத்திற் கொண்டு ஹரிஹரன் LIVE IN CONCERT மற்றும் ஸ்டார் நைட் நிகழ்ச்சி பிற்போடப்படுவதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.,
இந்த நிகழ்ச்சியை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 9ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
ஹரிஹரன் LIVE IN CONCERT மற்றும் ஸ்டார் நைட் நிகழ்ச்சி டிசம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
See less