சர்வதேசத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு 50,000 பணப்பரிசு..
மலேசியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் விக்னேஸ்வரன் ருஷாந்த் சாம்பியன் ஆனார்.
விக்னேஸ்வரன் ருஷாந்த் ஐ கெளரவிக்கும் நிகழ்வு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் யாழ் நகர UCMAS கிளையால்-UCMAS Jaffna Town Center இன் தலைவர் திருமதி தயானா சந்துரு தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக கோசலை மதன் ( சிரேஷ்ட விரிவுரையாளர், சட்டத்துறை, யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு விருந்தினராக காயத்திரி கோகுலன் (சட்டத்தரணி) மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பல தரப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சர்வதேச தரத்தில் வெற்றி பெற்ற மாணவனுக்கு வெற்றி கேடயத்தை பல்கலைக்கழக விரிவுரையாளர் கோசலை மதன் அவர்கள் வழங்கினார்.
50,000 பணப்பரிசினை சட்டத்தரணி காயத்திரி கோகுலன் மற்றும் தயானா சந்துரு அவர்களும் வழங்கி வைத்தனர்.
தகவல்: முகுந்தன்