அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய ரக விமானமொன்று மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
(16.12.2023) மாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தானது போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் தொலைவில், சேலம் பகுதிக்கு 12 மைல்கள் தென்மேற்கே இன்டிபெண்டன்ஸ் என்ற இடத்தில் நடந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் மூவரும் விமானத்தில் பயணித்தவர்களா? என்ற விபரம் தெளிவாக அறிமுடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இணைந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.