தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகள் சதொச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் ஒரு முட்டையின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இருந்த நிலையில், இன்று சந்தையில் ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது.
தற்போதுள்ள விலையை குறைக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்திருந்தும், அது நடக்காத நிலையில் அடுத்த 4 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பல்வேறு தரப்பினருக்கு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.