நாடு முழுவதும் இன்றிலிருந்து 05 நாட்களுக்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.