இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். தென்னாப்பிரிக்க அணியில் அதிகப்பட்சமாக Tony de Zorzi 28 ஓட்டங்களையும், Phehlukwayo 33 ஓட்டங்களையும் குவித்து இருந்தனர்.
தென்னாப்பிரிக்க அணி 27. 3 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களுக்கு சுருண்டது.அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக சர்வதேச போட்டியிலேயே 55 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.ஸ்ரேயாஸ் ஐயர் 52 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 16,4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 117 ஓட்டங்களை அடைந்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.