மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் காசல்ரீ நீர் தேக்கத்தில் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம்.
காசல்ரீ, விமலசுரேந்திர, கென்யோன் ஆகிய மூன்று நீர் தேக்கங்களின் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்யபட்டுள்ளது.
தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இன்று காலை 8 மணிக்கு பின்னர் மத்திய மலைநாட்டில் சற்று மழை ஓய்ந்து உள்ளது.சற்று சீரான கால நிலை ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்