வழுக்கி விழுந்த நபர் மரணம் பிரேதம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று மாலை 5.30 மணிக்கு 62 வயது உடைய சிவனு ராஜேந்திரன் என்பவர் கனத்த மழையின் போது பாலத்தின் வழியாக செல்லும் வேளையில், வழுக்கி விழுந்து இறந்து உள்ளார்.
அவரது உடம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு சவசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்