தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷா, தெலுங்கில் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் வந்துள்ளன. விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்த அவர், அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார்.
கடைசியாக தெலுங்கில், ‘நாயகி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இது தமிழ், தெலுங்கில் உருவான படம்.
ஏழு வருடங்களுக்கு பிறகு அவர் தெலுங்கில் மீண்டும் நடிக்கிறார். சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பரா’ என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை வசிஷ்டா இயக்குகிறார். இதையடுத்து நாகர்ஜுனாவின் 100-வது படமான ‘லவ் ஆக்ஷன் ரொமான்ஸ்’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.