இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று நடைபெற்றது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவைத் தான் ஆதிக் ரவிச்சந்திரன் இன்று டிசம்பர் 15ம் தேதி திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
சிவாஜி கனேசனின் மகனும் தமிழ் சினிமாவின் சின்னதம்பியுமான பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை வாழ்த்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்க் ஆண்டனி மூலம் ஹிட் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில், பிரபுவின் மகளை திருமணம் செய்துக் கொண்டு பெரிய இடத்து மாப்பிள்ளையாக மாறியுள்ளார்.