ஏனைய வங்கி அட்டைகளை தின்னும் BOC ATM..!
ஒரு பொதுமகனின் குமுறல்..!!
பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த நான் அவசர தேவையாக பணம் எடுக்க வேண்டி இருந்தமையால் வஜிர வீதி சந்தியில் அமைத்திருந்த BOC ATM இயந்திரத்துக்குள் என் வங்கி அட்டையை செலுத்தினேன்.
அது பிறிதொரு வங்கியின் அட்டை. அவ்வளவு தான்..!!
உள்ளே போன அட்டை வெளியே வரவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில், “” அது அப்படி தான். மற்ற வங்கிகளின் அட்டைகளை செலுத்தினால் சிலநேரங்களில் உள்ளே போய்விடும் வெளியே வராது..!! ” ஆனால் நான் என் வங்கி அட்டையை பாவித்து இதற்கு முதல் ஏனைய பல வங்கிகளின் ATM இயந்திரங்கள் ஊடாக பணம் பெற்றுள்ளேன். இப்படி ஒருபோதும் நடந்தது இல்லை. இதுவே முதல் முறை.
எனக்கோ மிகவும் தர்மசங்கடமான நிலை. கையில் பணம் இல்லை. ஒருவாறாக சமாளித்துக்கொண்டு வீடு திரும்பினேன். மறுநாள் வங்கிக்கு சென்று நடந்ததை கூறி புதிதாக மீண்டும் ஒரு ATM அட்டையை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டேன்.
இதே சம்பவம் எனக்கு மீண்டும் கடந்த மாதமும் நடந்தது.
அவசர பணி காரணமாக பணத்தை பெற்றுக்கொள்வதற்காக, ஏற்கனவே நடந்த சம்பவத்தை மறந்துபோய் கொட்டாஞ்சேனை BOC யில் அமைந்துள்ள ATM இயந்திரத்தினுள் எனது வங்கி அட்டையை செலுத்தி விட்டேன். அதோ கதி தான் அதற்கும்!!!
இது தொடர்பில் உள்ளே சென்று அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. என் அட்டையை பெற்று தரும் படி கேட்டபோதும் அவர்கள் சம்மதிக்கவில்லை. என்னுடைய வங்கிக்கு சென்று தொடர்புகொண்டு அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு என்னிடம் கூறப்பட்டது. அந்த நேரத்தில் அது சாத்தியமும் இல்லை. அவர்களது அசமந்த போக்கு அதிருப்தியையும் மனஉளைச்சளையும் கால விரயத்தையும் தான் எனக்கு ஏற்படுத்தியது.!
எனவே மக்களே ..!!
BOC ATM இயந்திரங்கள் ஊடாக உங்கள் ஏனைய வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் பெற முயற்சிக்கும் போது கவனமாய் இருங்கள்..!!
-பொதுமகன் ஒருவர் வைப்ஸ் செய்தி சேவையுடன் பகிர்ந்து கொண்ட அனுபவம்-