மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்த்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான ஏலம் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்த்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டு கால அணித்தலைவர் பதவி முடிவுக்கு வந்ததுள்ளது.
ரோஹித் 2013 ஆம் ஆண்டில் ரிக்கி பாண்டிங்கிடமிருந்து இடைக்காலப் பணியை ஏற்றுக்கொண்டார்.
ரோஹித்தின் தலைமையின் கீழ், மும்பை இந்தியன்ஸ் அணி 2015, 2017, 2019, மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பட்டத்தை உயர்த்தியது.