அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது அஜித்துடன் அர்ஜுன், ஆரவ் இருவரும் ஒன்றாக ஹோட்டல் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் இரவு உணவு சாப்பிட்ட போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. மங்காத்தா படத்துக்குப் பின்னர் அஜித், அர்ஜுன் கூட்டணி விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் – அர்ஜுன் – ஆரவ் இணைந்து நடிக்கும் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகிறாராம் மகிழ் திருமேனி. அதேபோல் த்ரிஷாவுக்கும் இந்தப் படத்தில் செம்ம மாஸ்ஸான ஆக்ஷன் சீன்ஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டீசர் ஏதேனும் ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.