கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கனத்த மழை பெய்து வருவதால் ஹட்டன் போடைஸ் வழி-டயகம செல்லும் பிரதான சாலையில் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளதால் அவ் வீதியூடாக செல்லும் வாகனங்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ் வீதியில் செல்லும் மற்றும் பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இந்த வீதியை செப்பனிட வேண்டும். அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் இருந்தும் பெருந் தோட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளையும் செப்பனிட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.