தென்னாப்பிரிக்க கேப்டன் டாஸ் வென்ற போதே இந்தப் போட்டி தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாக மாறியது.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சூர்யகுமார் 56 எடுத்தார். ரிங்கு சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது. அப்போது மீண்டும் மழை வந்ததால் அத்துடன் இந்தியாவின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இரண்டாம் பாதிக்கு முன்பும் மழை வந்ததால் பிட்ச்சை சுற்றி இருந்த அவுட் பீல்டு முழுவதும் ஈரமாக இருந்தது. அதனால், பந்து விரைவாக ஈரமாக மாறியது. அதன் பின் இந்திய பந்துவீச்சாளர்களால் சரியாக பந்து வீச முடியவில்லை. ஸீம் பவுலிங், ஸ்விங் பவுலிங் என எதுவும் வேலை செய்யவில்லை. பல பந்துகள் வைடாகவும், லெக் திசையிலும் சென்றது.
துவக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். மார்கிரம் 17 பந்துகளில் 30 ரன்களும், மில்லர் 12 பந்துகளில் 17 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 4 விக்கெட்களை வீழ்த்திய போதும், ஸ்டப்ஸ், ஆன்டில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து ஆடி 13.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டச் செய்தனர்.
தென்னாப்பிரிக்க அணி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி