ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞனாவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவுடன் தலைவர் 170 படத்தின் தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.
த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். “குறி வச்சா இரை விழணும் என ரஜினி பேசும் பஞ்ச் வசனம் மற்றும் அந்த கண்ணாடி கூலர்ஸாக மாறுவது வேறலெவல்.
ஜெயிலர் படத்தை போலவே இந்த படமும் பான் இந்தியா படமாகவும் மல்டி ஸ்டாரர்கள் நிறைந்துள்ள நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் தெரிகிறது.