ஜேர்மன் திரையரங்கில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படமான ‘உன்னிடத்தில் நான்’, விரைவில் Youtube தளத்தில் வெளியாகவுள்ளது.
ஜேர்மனியில் S.R. Productions தயாரிப்பில், தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் சுவன் ருத்திரேஸ்வரன் (Sven Ruthireswaran) மற்றும் சந்தோஸ் ஜெயக்குமார் (Shanthoosh Jeyakumar) இயக்கத்தில், புகைப்பட கலைஞர் சுஐிதரன் ரவி ஆகிய கலைஞர்களினால் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கபட்டு, 2019-ல் முதல் திரைப்படம் யோன் (John) யூரூப் (Youtube) தளத்தில் வெளியிடப்பட்டது.
2021-ல் இரண்டாவது திரைப்படமாக 56 நிமிடங்களை கொண்ட புதிர் (Puthir) திரைப்படத்தை, ஜேர்மனியில் சுமாா் 200 பார்வையாளர் மத்தியில் திரையிடப்பட்டது.