மஹரகம நகரில் உள்ள பொதுக் கழிவறை முறையான பராமரிப்பு இன்மையால் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக நிலவி வரும் குறித்த பிரச்சினையால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட பொது கழிப்பறைகள் மிகவும் அசுத்தமான நிலையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில், இந்த கழிப்பறை சீரமைக்கப்பட்டது, ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்துவதில் தற்போது பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கனமழையால் கழிவறையில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து நகரின் வடிகால் அமைப்பில் சேர்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது இதனால் மஹரகம பொதுச் சந்தையில் வியாபாரம் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கழிவறை அமைப்பிற்கு மிக அருகாமையில் உள்ள மஹரகம நகரசபை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம் எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.