சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை இன்றையதினமே (11) நடத்தி அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் சபைமுதல்வர் அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான இன்றைய தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள்
நிறைவுற்றதை உடனடுத்து ஒழுக்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து இன்றையதினமே நிறைவேற்றுவதற்கான பிரேரணையை சபை முதல்வர் முன்வைத்தார்.
அத்துடன், குறைநிரப்புத் தெகை செலவீனத் தலைப்பை இன்றைய தினமே அங்கீகரிப்பதற்கும் அவர் முன்மொழிந்தார்.
அதற்கமைய, இந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகோரிக்கை விடுத்தது. இதற்கமைய இன்று மு.ப 10.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்ததுடன்,
அதற்கமைய ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.