Xiaomi சமீபத்தில் தனது புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட் போனான Redmi 13C-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிசம்பர் 16ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றதாம்.
இந்த ஸ்மார்ட் போனில் 4ஜிபி ரேம் + 128 GB மெமரி மாடலின் விலை ரூ.10,999, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரூ.12,499 மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரூ.14,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், இந்த மொபைலானது திடமானதாகவும் வாடிக்கையாளர்களுக்கு காணப்படுகின்றது.
இதில் பக்கவாட்டில் கைரேகை சென்சாரும், திரையில் கொரில்லா கிளாஸ் 3 பூச்சு இவற்றினை பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில் 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 600nits அதிகப்படியாக பிரகாசததுடன், 6.74 இன்ச் LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 16 ஜிபி வரை மேலும் சேமிக்க முடியுமாம். இதன் பேட்டரி 5000mAh கொண்டுள்ளதுடன், 18W சார்ஜிங்கை ஆதரித்தாலும், குறித்த நிறுவனம் 10W சார்ஜரையே கொடுக்கின்றது.
50 எம்பி AI இரட்டை கமெராவும், செல்பி கமெரா 5MP-யாகவும் இருக்கின்றது. ஆண்ட்ராய்டு 13ல் இயங்குவதுடன் ,இதன் UI வடிவமைப்பு பயனர்களுக்கு ஏற்ற வகையிலேயே காணப்படுகின்றது.