ஹாலிஹெல – உடுவர பகுதியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய மற்றும் பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன ஆகியோர் தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணிக்கும் கனரக வாகனங்கள் மாற்று வீதியாக எட்டம்பிட்டிய மாலிகதென்ன ஊடாக பண்டாரவளை வீதியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் கொழும்பு – பதுளை பிரதான வீதியை பயன்படுத்தும் 99 வழித்தட பயணிகள் போக்குவரத்து பேருந்துகளும் இந்த மாற்று வீதியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.