சுந்தரின் சூப்பர் நடவடிக்கை..!! அதிக வட்டி 17 Loan Apps-ஐ தட்டிதூக்கிய Google

வெறும் 5 நிமிடங்களில் கடன்.. மிகவும் எளிமையான செயல்முறை.. போன்ற வாக்குறுதிகளை வழங்கும் லோன் ஆப்களின் (Loan Apps) எண்ணிக்கை நாளுக்கு நாள் அத்திகித்துக்கொண்டே போகிறது. இதுபோன்ற ஆப்கள் எவ்வளவு ஆபத்தானவைகள் என்பதை நிரூபிக்கும்படி சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது!

மிகவும் எளிமையான முறையில் கடன் தரும் ஆப்கள் என்கிற பெயரில், டேட்டா திருட்டு (Data Harvesting) வேலைகளை பார்த்து வந்த 17 ஆண்ட்ராய்டு ஆப்களை கண்டறிந்த கூகுள் (Google), அவைகள் அனைத்தையுமே தனது பிளே ஸ்டோரில் (Play Store) இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

கூகுள் நிறுவனத்தால் நீக்கப்பட்ட 17 லோன் ஆப்களின் பெயர்கள் என்ன? இந்த ஆப்கள் பயனர்களை எப்படியெல்லாம் ஏமாற்றும்? ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட பிறகு இவைகள் என்னென்ன திருட்டு வேலைகளை செய்யும்? அதை வைத்து பயனர்களை என்னவெல்லாம் செய்ய சொல்லும்?

பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் ஸ்பை லோன் (Spy Loan) என்று அழைக்கப்படும் இந்த ஆப்கள், மிகவும் நம்பகமான கடன் வழங்குநர்களை போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். பயனர்கள் இதை நம்பி இன்ஸ்டால் செய்த பின்னர், அவர்களை ஏமாற்றி தனிப்பட்ட தரவுகளை அணுகுவதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்கிறது.

பின்னர் இந்த ஆப்கள் காண்டாக்ட் லிஸ்ட் (Contact Lists), எஸ்எம்எஸ் மெசேஜ்கள் (SMS Messages), போட்டோக்கள் (Photoes) மற்றும் ப்ரவுஸர் ஹிஸ்டரி (Browser History) உட்பட பலதரப்பட்ட தகவல்களை திருடும். பின்னர் இந்த தரவுகளை வைத்து அதிக வட்டி விகிதங்களுடன் கடனை திருப்பி செலுத்தும்படி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகிறது மற்றும் அச்சுறுத்துகிறது.

பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பு இந்த 17 ஆப்களும் 12 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோட்களை பெற்றுள்ளது என்றும், இந்த ஆப்கள் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், மெக்சிகோ, இந்தோனேசியா, கொலம்பியா, எகிப்து, கென்யா, பெரு, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதோ அந்த ஆப்களின் பெயர்கள்:

  1. ஏஏ க்ரெடிட் (AA Kredit) 02. அமோர் கேஷ் (Amor Cash) 03. குயாபா கேஷ் (GuayabaCash) 04. ஈஸி கிரெடிட் (EasyCredit) 05. கேஷ்வாவ் (Cashwow) 06. கிரெடிபஸ் (CrediBus) 07. பிளாஷ் லோன் (FlashLoan) 08. பிரஸ்டமோஸ் கிரெடிட்டோ (PréstamosCrédito) 09. பிரஸ்டமோஸ் டி கிரெடிட்டோ-யுமிகாஷ் (Préstamos De Crédito-YumiCash) 10. கோ கிரெடிடோ (Go Crédito) 11. இன்ஸ்டன்டேனியோ பிரஸ்டமோ (Instantáneo Préstamo) 12. கார்ட்டெரா கிராண்ட் (Cartera grande) 13. ரேப்பிடோ கிரெடிடோ (Rápido Crédito) 14. ஃபைன்அப் லெண்டிங் (Finupp Lending ) 15. 4எஸ் கேஷ் (4S Cash) 16. ட்ரூ நைரா (TrueNaira) 17. ஈஸி கேஷ் (EasyCash)

இதுபோன்ற ஆப்களில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? எந்தவொரு லோன் அல்லது பைனான்ஸ் ஆப்பை பதிவிறக்கும் முன், அதைப்பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்யவும். குறிப்பிட்ட ஆப்பை டவுன்லோட் செய்த மற்ற பயனர்களின் ரீவியூஸ் மற்றும் ரேட்டிங்ஸ்-ஐ ஆராயவும். முடிந்தால் குறிப்பிட்ட ஆப்பின் சட்டப்பூர்வத்தன்மையை ஆன்லைன் வழியாக உறுதிப்படுத்தவும்.

மேலோட்டமாக பார்ப்பதற்கு நம்பகமானதாக தெரிந்தால்.. குறிப்பிட்ட ஆப் ஆனது என்னென்ன தரவுககளுக்கான பெர்மிஷன்களை கேட்கிறது என்பதை துல்லியமான கவனிக்கவும். தேவையற்ற பெர்மிஷன்களை வழங்குவதில் கவனமாக இருக்கவும். ஒருவேளை முக்கியமான தரவுகளுக்கான அணுகலை கோரினால், அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

எந்தவொரு ஆப்பையும் பதிவிறக்கம் செய்யும் முன், அந்த ஆப்பின் டெவலப்பர் விவரங்களை சரிபார்க்கவும். பொதுவாகவே நேர்மறையான ஆப்கள் நன்கு அறியப்பட்ட டெவலப்பர்களிடம் இருந்து தான் வரும். கடைசியாக மற்றும் முக்கியமாக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) போன்ற அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களின் வழியாக மட்டுமே ஆப்களை டவுன்லோட் / இன்ஸ்டால் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *