ரோட்டுக்கடை சிக்கன் ப்ரை

உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று செய்துள்ளீர்களா? சற்று வித்தியாசமான ரெசிபியை இன்று ட்ரை செய்ய விரும்புகிறீர்களா?ரோட்டுக்கடை ஸ்டைல் சிக்கன் ப்ரை செய்யுங்கள். இந்த சிக்கன் ப்ரை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 1 கிலோ * எலுமிச்சை சாறு – 1/4 கப் * மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் * மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் * கரம் மசாலா – 2 டீஸ்பூன் * மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் * உப்பு – சுவைக்கேற்ப * எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு… * கொத்தமல்லி – 1/2 கப் * புதினா – 1/2 கப் * இஞ்சி – 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) * பூண்டு – 6-8 பல்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * பின்னர் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு பிரட்ட வேண்டும். * பிறகு அந்த சிக்கனை குறைந்தது 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். * அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். * எண்ணெய் சூடாவதற்குள், அரிசி மாவை சிக்கனுடன் சேர்த்து கிளற வேண்டும்.

  • பின்னர் பிரட்டிய சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு 8-10 நிமிடம் சிக்கனை வேக வைத்து எடுத்தால், சுவையான ரோட்டுக்கடை ஸ்டைல் சிக்கன் ப்ரை தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *