நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினார்.
நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அசர்பைஜானில் துவங்கப்பட்டு தொடர்ந்து இடைவெளி இல்லாமல் நடந்து வந்தது. இந்த படத்தின் 90 சதவிகித சூட்டிங் அங்குதான் என்று முன்னதாக கூறப்பட்டது. இதையொட்டி தீபாவளிக்கு கூட சென்னை திரும்பாமல் படக்குழுவினர் தொடர்ந்து சூட்டிங்கில் ஈடுபட்டனர். அங்கு அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அஜித் -திரிஷா பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்நிலையில் அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது மீண்டும் சூட்டிங்கிற்காக அசர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்களின் விமானநிலைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
நடிகை திரிஷாவை மிகவும் இளமையாகவும் ஸ்டைலிஷ்ஷாகவும் காட்ட படக்குழுவினர் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுவரை இல்லாதவகையில் விடாமுயற்சி படத்தில் திரிஷாவின் கேரக்டர் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அஜித்துடன் திரிஷா நடித்துள்ள நிலையில் இந்தப் படமும் அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அசர்பைஜானில் இன்று அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 15 நாட்கள் அதி பயங்கரமான கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் அஜித், திரிஷா, அர்ஜூன் மற்றும் ஆரவ் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆக்ஷன் காட்சியை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் கொரியோகிராப் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் அசர்பைஜானிலேயே எடுக்கப்பட உள்ளதாகவும் வரும் பிப்ரவரி வரையில் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.