இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் அணியில் முழுநேர கிரிக்கெட் ஆலோசகராக இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலோபாய திட்டமிடல், தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி, தேசிய அணியின் ஒட்டுமொத்த மேம்பாடு ஆகியவற்றில் ஜெயசூர்யவுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளது.மாதாந்தம் ஐம்பது இலட்சம் ரூபா செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
குறித்த கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.