கனடாவில் வாகன திருட்டு உட்பட 70 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டநிலையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழுவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
ரொறன்ரோ காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போதே 4 தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
கீர்த்தன் மங்களேஸ்வரன்(29)கோபி யோகராஜா(29) மிலோஷா ஆரியரத்தினம்(29) கஜன் யோகநாயகம்(32) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவார்.
இவர்கள் Service Ontario ஊழியர்களுடன் இணைந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது, இவர்களிடமிருந்து பெருந்தொகை பணம், சொகுசு வாகனங்கள் உட்பட, 1.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.