நடிகை த்ரிஷா மீது நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதற்க்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இந்த மாதிரி மனிதர்கள் மனித குலத்திற்கே அவமானம்” என்று தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட திரைபிரபலங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சக திரைநாயகி த்ரிஷாவே, மன்னித்துவிடு’ என்று மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை த்ரிஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அதில், முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டியுள்ள மன்சூர் அலிகான், மூன்று பேரும் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.