ஒரே வீட்டில் பிறந்த காலி மாபலகம பிரதேசத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
அனுத மினுல கஜநாயக்க, அகிந்து விருல கஜநாயக்க மற்றும் அமிரு சனுல கஜநாயக்க என்ற ஒரே சூழில் பிறந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.
அனுத 9 ஏ சித்திகளையும் அமிருவும் அகிந்துவும் 8 ஏ சித்திகளையும் 1 பி சித்தியையும் பெற்று அதிக மதிப்பெண்களுடன் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.மொத்தமாக 25 A பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலி புனித அலோசியஸ் கல்லூரியில் சாதாரண தர பரீட்சையில் தோற்றி இந்தச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.