இலங்கையின் பொருளாதாரத்தை மாற்றும் உலகத்தரம் வாய்ந்த திட்டமான தெற்காசியாவில் முதன்மையான சர்வதேச வர்த்தக மற்றும் சேவை மையமாக கொழும்பு துறைமுக நகரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மூன்று முன்னணி வர்த்தக வங்கிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கான உரிமத்தினை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அதன்படி , கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி(HNB) மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றுக்கு இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தின் வெற்றிக்கு வலுவான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, இலங்கை மத்திய வங்கி, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதற்கு ஆணைக்குழு தனது வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.