சென்னையில் தூள் கிளப்பும் ஆஃபர்.. OnePlus Open ரூ.45,000 தள்ளுபடி..

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.45,000 (இந்திய மதிப்பில்) வரையிலான அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. ஒன்பிளஸ் ஃபேமிலியில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக (OnePlus latest smartphone) அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) மீது தான் இந்த சலுகை கிடைத்துள்ளது.

பிளாக்ஷிப் கில்லர் (flagship killer), பார்த்து-பார்த்து செதுக்கிய டிசைன் (design), படுவேகமான பெர்ஃபார்மென்ஸ் (performance), ஒன்றுக்கு இரண்டு டிஸ்பிளே (display), சக்தி வாய்ந்த சிப்செட் (chipset), போட்டோக்ராபர்களே பொறாமைப்படும் கேமரா (camera) அம்சம், நீடித்து நிலைக்கும் நிலையான பேட்டரி (battery) என்று தரமான அம்சங்களை பேக் செய்துள்ள சாதனம் தான் இந்த ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போன் (OnePlus Open Foldable Smartphone).

ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போன் ஃபோல்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் 6.31″ இன்ச் அளவு கொண்ட 2K திறன் உடைய சூப்பர் ஃபிலுயிட் அமோலெட் (Super Fluid AMOLED) டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை விரிப்பதன் மூலம் இதன் டிஸ்பிளே 7.82″ இன்ச் கொண்ட 2K ஃபிலெக்ஸி பிலுயிட் அமோலெட் (Flexi Fluid AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் அம்சத்துடன் வருகிறது. இந்த 2 டிஸ்பிளேக்களும் 10 பிட் கலர் அம்சம், sRGB அம்சம் மற்றும் DCI-P3 உடன் ஹை ஃபிரிக்வேன்சி PWM ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 16ஜிபி ரேம் (16GB LPDD5X RAM) மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் (512GB UFS 4.0 ROM) அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இதன் அடுத்த தெறி அம்சம் என்றால், இதன் கேமரா தான். வழக்கம் போல ஒன்பிளஸ் அதன் திறமையை தரமான ட்ரிபிள் கேமரா அம்சத்தின் மூலம் இந்த போனின் நிலையை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. இந்த ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போனின் கேமராவையும் ஹசெல்ப்ளாட் (Hasselblad) டியூன் செய்துள்ளது.

ந்த ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) போல்டபில் ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்ஸல் சோனி LYT-800 சென்சார் (48MP Sony LYT-800), 64 மெகாபிக்ஸல் OV64B சென்சாருடன் 3X ஆப்டிகல் ஜூம் (64MP OV64B 3X Optical Zoom), 48 மெகாபிக்ஸல் IMX581 (48MP Sony IMX581) சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் இது 20MP கவர் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா உடன் வருகிறது. இது 4805mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 67W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது எமரால்டு டஸ்க் (Emerald Dusk) மற்றும் வொயேஜர் பிளாக் (Voyager Black) நிறத்தில் வாங்க கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.1,49,999 ஆகும். தற்போது கிடைக்கும் அமேசான் மற்றும் பிற ஆன்லைன் சலுகையுடன் இதன் விலை ரூ.1,39,999 ஆக குறைந்துள்ளது.

OnePlus Open ஸ்மார்ட்போன் மீது நேரடியாக ரூ.10,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அதிக விலைக்கு எக்ஸ்சேஞ் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ரூ. 44,500 வரை எக்ஸ்சேஞ் சலுகை கிடைக்கிறது. இதன் மூலம் ஒன்பிளஸ் ஓபன் போனின் விலை ரூ.95,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *