இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 544,488 வாடிக்கையாளரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
2023-ஒக்டோபர் இறுதிக்குள் மின்சார சபையின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 6,998,068 ஆகவும், சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் ஒன்றரை இலட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வதாகவும் மின்சார சபை குறிப்பிடுகிறது.