தலவத்துகொடை – கிம்புலாவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீதியோர உணவு விற்பனை நிலையங்களை எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், விற்பனை நிலையங்களை அகற்றுவதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் கிம்புலாவல வீதியோர உணவங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இந்த தகவலை வெளியிட்டனர்.