தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, அவர் நலமுடன் இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், விஜயகாந்த் உடன் இருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அவரது உடல்நிலை சீரானதால் அவர் மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.