எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஆசை அல்லது விருப்பம் இருக்கும். அதாவது பயணம் செய்வது, குறிப்பிட்ட பொருளை வாங்கி சேகரிப்பது, வித்தியாசமான உணவுகளை ருசிப்பது என பல விதமான ஆசைகள் இருக்கும்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கானுக்கும் ஒரு ஆசை இருக்கு, அவர் ஒரு கார் பிரியர். அவரிடம்ஏராளமான விலையுயர்ந்த கார்கள் நிற்கின்றன. தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் காரான ஐயோனிக் 5 எஸ்.யு.வி. காரை அவர் வாங்கியுள்ளார். இது ஹூண்டாய் ஐயோனிக் 5-ன் 1,100வது வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் உள்ள கார் சேகரிப்புகளில், இந்தியாவின் விலையுயர்ந்த எஸ்.யு.வி. வாகனமான ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜூம் அடங்கும். தற்போது ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கியுள்ளார்.
இதுதான் அவரது வாகன கலெக்ஷனில் உள்ள முதல் எலக்ட்ரிக் வாகனம். இந்த காரின் சராசரி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.45.95 லட்சம் (இந்திய மதிப்பில்). நடிகர் ஷாரூக்கான பல ஆண்டுகளாக ஹூண்டாய் கார்களின் பிராண்ட் தூதராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாரூக்கான் கூறுகையில், இது எனது முதல் எலக்ட்ரிக் வாகனம், மேலும் இது ஹூண்டாய் பிராண்ட் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சயடைகிறேன். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் வாகனம் மார்வெல் அதன் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த ஆண்டு 1000 கார்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது என்பது நம்ப முடியாதது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இருப்பதால், எங்களின் 25 ஆண்டு கால பயணம் எனக்கும், பிராண்டுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தார்.
ஆட்டோ எக்ஸ்போ 2023ல் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் காரான ஐயோனிக் 5 எஸ்.யு.வி. வாகனம் நடிகர் ஷாருக்கானால் வெளியிடப்பட்டது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் வாகனத்தில் 72.6 kWh பேட்டரியுடன் 2WD உள்ளது. இது 214.5 பி.எச். பவரையும், 350 என்.எம். டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.
இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். இந்த கார் இரட்டை காக்பிட்டுடன் வருகிறது. அதில், 12-இன்ச் புல் டச் இன் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஹூட்லெஸ் 12 இன்ச் டிஜிட்டல் கேஜ் கிளஸ்டர் ஆகியவை டிரைவரின் தேவையை பூர்த்தி செய்ய மாற்றிக்கொள்ளலாம்.