விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்து தாய்லாந்தில் நடைபெற்றது. இப்போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தொடரவுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் தளபதி 68 படத்தில் மொத்தம் 5 பாடல்கள், இதில் வெங்கட் பிரபுவின் தந்தையும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் ஒரு பாடலை எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் கங்கை அமரன்.
விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தளபதி 68 திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.