சுற்றுலா துறையில் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை ..!!

சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான “Travel Off Path” அறிக்கை தெரிவித்துள்ளது.இந்த பட்டியல் எஸ்.சி.ஓ (Search engine optimization ) நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் நவம்பர் மாதத்தில் மாத்திரம் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Iconic train passing over Nine Arch Bridge in Demodara, Ella, Sri Lanka

இலங்கைத் தீவானது அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான மலிவான இடங்களில் ஒன்றாகத் தொடர்ந்து தரவரிசைப் படுத்தப்படுகின்றது.

இலங்கையில் சிறப்பான கடற்கரை வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும். ஏராளமான கலாச்சாரம் மற்றும் இயற்கை அதிசயங்களுடன் உங்கள் ஓய்வு நேரத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

2024ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கை மாறமுடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *